யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 38 ஆண்டுகள்

323 0

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு  இன்றுடன் 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், 38 ஆண்டுகள் நிறைவு நாள் இன்று நினைவு கூரப்பட்டது. இந்நிகழ்வு யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தமிழரின் வரலாற்றுச் சான்றாக, தனிப்பெரும் அடையாளமாக இருந்த யாழ்.நூலகம் 1981ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.