தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் நாங்குநேரி எம்எல்ஏ பதவியிலிருந்து இன்று விலகினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசும் இடம்பெற்றது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து எச்.வசந்த குமார் இனி எம்.பி. அடையாளத்துடன் மக்களவைக்கு செல்ல இருக்கிறார். எனவே அவர் ஏற்கனவே வகித்து வரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.
இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சபாநாயகரிடம் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார்.

