யாழில் வாகன விபத்து ; இருவர் படுகாயம்!

236 0

ஹயஸ் வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில். முச்சக்கரவண்டி முற்றாகச் சேதமடைந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கச்சேரி பெந்தகோஸ்த் தேவாலயத்துக்கு அருகாமையில் உள்ள வளைவில் நேற்று பகல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

யாழ்ப்பாணம் நகரத்தை நோக்கிப் பயணித்த ஹயஸ் வாகனம் புங்கன்குளம் வீதியைக் கடந்து, வளைவுக்கு அருகாமையில் சென்றுகொண்டிருந்த போது, முன்பாகச் சென்ற பட்டா ரக வாகனத்தைக் கடந்து செல்ல முற்பட்ட வேளை, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.