ரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை!-தமிழிசை சவுந்தரராஜன்

116 0

தமிழகத்தில் உள்ள ரெயில்வே பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள ரெயில்வே பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 20–ந்தேதி சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில்(ஐ.சி.எப்.) ‘அப்ரண்டிஸ்’ பணிகாக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது.

இதில் தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே வேலையில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்ததற்காக தமிழக பா.ஜ.க. சார்பில் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக பா.ஜ.க. சார்பில் ரெயில்வே துறையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுத்த ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலுக்கு நன்றி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது