தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக்கூட்டம் (காணொளி)

206 0

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழுக்கூட்டம், வவுனியாவில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில், இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் கட்சியின் நிலைப்பாடு, சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தலைமைக் குழுக்கூட்டத்தில், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயளாலாளர் என்.சிறீகாந்தா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதாரலிங்கம், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரன், பிரசன்னா இந்திரகுமார், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் அஞ்சலா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.