இந்துக்களின் பாரம்பரிய உரிமைகள் அரசாங்கத்தால் கபடத்தனமாக பறிப்பு – மனோ

480 0

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக, திருகோணமலை வாழ், தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிண்ணியா, இந்துக்கோவிலை உடைத்து, அங்கு விகாரையொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “இலங்கை அரசாங்கத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் மூலமாக திருகோணமலை மாவட்ட்தில் காணப்படுகின்ற தமிழ் இந்தக்களின் பாரம்பரிய மத இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவது நிரூபனமாகியுள்ளது.

வடக்கு கிழக்கிலே இந்து கோயில்களை எல்லாம் அடையாளப்படுத்தி பட்டியல்படுத்தி அதனை பாதுகாக்கப்போகின்றோம் என்று கூறி, அவற்றை மறைமகமாக சிங்கள பௌத்த சின்னங்களாக காட்டக்கூடிய இலக்கிலே இந்த திணைக்களம் செயற்படுகின்றது.

இது நாட்டிலே மீண்டும் ஒருமுறை வன்முறையை, பிரச்சினையை உருவாக்கம் செயற்பாடாகவே அமைகின்றது” என்று குறிப்பிட்டார்.