இரும்பு தகடுகளை திருடிய 4 பேர் கைது

66 0

வீரகெட்டிய  பிரதேசத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து 1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள இரும்பு தகடுகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி வீரகெட்டிய பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 25, 30, 31 மற்றும் 38 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், இவர்கள் பெதிகம மற்றும் அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இன்று சந்தேகநபர்கள் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.