கடந்த 10 வருடங்களாக பேணப்பட்டு வந்த அமைதி இல்லாமலாக்கப்பட்டுள்ளது!

285 0

நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை நிறைவு செய்து, அன்றிலிருந்து கடந்த 10 வருடங்களாக பேணப்பட்டு வந்த அமைதி இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அதற்கான காரணம் நாட்டில் இராணுவ வீரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு புலனாய்வுப்பிரிவு முழுழுமையாக செயலற்றுப்போயுள்ளமையும் இதற்கான மற்றொரு காரணமாகும். இந்த அரசாங்கம் இவற்றை ஏற்றுக் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் இதனை விடவும் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வஜிராஷ்ரம விகாரையில் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஷேட நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.