அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள் – இராணுவத் தளபதி

359 0

இம்­மாதம் 21 ஆம் திக­தியின் பின்னர் மீண்டும் பாட­சா­லை­க­ளுக்கும் அலு­வ­ல­கங்­க­ளுக்கும் சென்று அன்­றாட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு  இரா­ணுவத் தள­பதி மஹேஷ் சேனா­நா­யக்க கோரிக்கை விடுத்­துள்ளார்.

அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளக்­கூ­டிய சூழல் நாட்டில் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக இரா­ணுவத் தள­பதி மஹேஷ் சேனா­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

இதனால் அனைத்து மக்­க­ளுக்கும் வலு­வான முறையில் இந்த வேலைத்­திட்­டத்­துடன் இணைந்து கொள்ள வேண்­டு­மென அவர் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

நாட்டில் அமை­தி­யான சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இதனால் அன்­றாட நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடியும்.

இன்று 20ஆம் திகதி விடு­முறை தின­மாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நாளை 21ஆம் திக­தியின் பின்னர் மீண்டும் பாட­சா­லை­க­ளுக்கும் அலு­வ­ல­கங்­க­ளுக்கும் சென்று அன்­றாட செயற்­பா­டு­களை வழ­மை­யான முறையில் முன்­னெ­டுக்­கு­மாறும் இரா­ணுவத் தள­பதி கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

மாண­வர்­களை பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­பு­வதில் பெற்­றோ­ருக்கு கூடு­த­லான பொறுப்­புக்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் அவர்  குறிப்­பிட்­டுள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.