தமிழகம் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பாகவும் ஈழத்தில் நடைபெற்ற ஈழவிடுதலை போராட்டம் மற்றும் சிங்கள அரசின் படுகொலைகளை வெளிப்படுத்தும் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் விடுதலை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்துகொண்டு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.


