அமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண் படுகொலை

376 0

அமெரிக்காவில் 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை படுகொலை செய்து கருப்பையில் இருந்து குழந்தையை திருடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் மார்லென் ஒசோயா லோபேஷ், இவர் 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் இவர் கிளாரிசா பிகுயரோயா (46) என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்றார்.

பிறக்க இருக்கும் தனது குழந்தைக்கு புதிய துணிமணிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வாங்க சென்றார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிளாரிசா, அவரது மகள் டெசிரி (24), கிளாரிசாவின் காதலன் பியோட்போபர்க் (40) ஆகியோர் படுகொலை செய்தது தெரிய வந்தது. மேலும் பிணத்தை வீட்டின் அருகேயுள்ள குப்பை கிடங்கில் மறைத்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மார்லெனின் உடலை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவரது வயிற்றில் குழந்தை இல்லை. அவரை கொன்ற 3 பேரும் வயிற்றை கிழித்து கர்ப்பபையில் இருந்த குழந்தையை எடுத்துள்ளனர்.

விசாரணையில் குழந்தையை திருடுவதற்காக இளம்பெண் மார்லென் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. எனவே கிளாரிகா பிகுயரோவா, டெசிரி, பியோடர் போபக் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.