கோட்டாவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் அறிவிப்பு

4706 0

gotha

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜப்கஷவின் இராணுவ பாதுகாப்பை அகற்றி காவற்துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் மாற்றங்கள் செய்யப்படாது என பாதுகாப்பு செயலாளர் அறிவித்துள்ளார்.
முக்கியஸ்தர்களுக்கு இராணுபாது காப்பு வழங்கப்படுவது சட்ட ரீதியற்றது எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமக்கு உயிராபத்து இருப்பதால் இராணுபாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டாம் என தாம் பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கோடாபாய ராஜபக்ஷ நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள கருணாசேன ஹெட்டியாராட்சி தமக்கு அவ்வாறான கோரிக்கை எதுவும் முன்வைக்கபடவில்லை என தெரிவித்துள்ளார்.

Leave a comment