வேலூர் ஜெயிலில் மும்பை கைதியிடம் செல்போன் பறிமுதல்

269 0

வேலூர் ஜெயிலில் மும்பை கைதி பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பையை சேர்ந்தவர் மணிவண்ணன் என்கிற சுபாஷ் (வயது 53). கஞ்சா கடத்திய வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு சென்னையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் 2017ம் ஆண்டு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கபட்டது. புழல் ஜெயிலில் அடைக்கபட்டார். கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு 3-வது பிளாக்கில் அடைக்கபட்டார். அவர் செல்போனை பதுக்கி வைத்து பேசி வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை சிறைக்காவலர்கள் அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் ஜெயிலில் நேற்று முன்தினம் செல்போன் பேட்டரி சிக்கியது. இதனை பயன்படுத்தியது யார் என்பது தெரியவில்லை ஜெயிலுக்குள் சோதனைக்கு பிறகே அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது.

அப்படியிருக்க ஜெயில் கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது என்பது கோள்விக்குறியாக உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

ஜெயிலில் பல கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யபட்டுள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்பது பற்றி துப்புதுலக்குவதில்லை. நடவடிக்கையும் எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.