இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கவே உடன்படிக்கை என்கிறாா் ஜி எல் பீரிஸ்

515 0

2011

மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்தமைக்கான நன்றிக்காகவே இலங்கை இந்தியாவுடன் பொருளாதார உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக மஹிந்த ராஜபக்ச தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எனவே இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கை, பொருளாதார ரீதியில் அல்லாமல், அரசியல்ரீதியிலேயே அதிகமாக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment