சாவகச்சேரி குப்பை மேட்டில் பாரிய தீ

357 0

தென்மராட்சி – சாவகச்சேரி நகராச்சி மன்ற குப்பை மேட்டில் நேற்று (12) இரவு 10.20 மணியளவில் பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டிருந்தது.

இன்று  அதிகாலை வரை சுமார் இரண்டு மணி நேரமாக இத்தீப்பரவல் நீடித்தது. இந்நிலையில், பிரதேச இளைஞர்கள் மற்றும் நகர சபை உறுப்பினர்கள் சிலர் இணைந்து நகராட்சிமன்ற குடிநீர் தாங்கியை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்முயற்சியால், குப்பைகள் முற்றாக எரிந்த நிலையில் அதிகாலை 1.30 – 2.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது.

இந்த, தீப்பரவல் குறித்து தீயணைப்பு படை மற்றும் 119- அவசர பொலிஸருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இறுதி வரையிலும் அங்கு உரிய அதிகாரிகள் எவரும் வருகை தரவில்லை.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விஷமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.