நாளை பாடசாலை குறித்து இரு முறை சிந்திக்க வேண்டும்- மஹிந்த

343 0

நாட்டில் நாளை (13) பாடசாலைகள்  ஆரம்பிப்பதற்கான பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அரசாங்கத்தினால் உறுதியான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அடிப்படைவாதிகளை தேடும் நடவடிக்கை கடந்த அரசாங்க காலத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களின் அமைப்புக்குள் புலனாய்வுத் துறையினரை அனுப்பி தகவல்கள் திரட்டப்பட்டிருந்த நிலைமையை மாற்றிமைத்தன் பின்னர்தான் இந்த நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பில் உறுதியான அத்தாட்சியொன்றை அரசாங்கம் வெளியிடாமல், பாடசாலைகள் திறப்பது குறித்து ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதேபோன்று, விகாரைகளுக்கு அருகில் வெசாக் தின நிகழ்வுகளை மிகுந்த அவதானத்துடன் முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சமாதானமான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக உறுதிமொழியொன்று அவசியம் எனவும், ஜனாதிபதியும், பிரதமரும் ஒரே குரலில் இதனை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் எதிர்க் கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.