வாள்களின் பின்னணியில் பாரிய திட்டமொன்று இருந்துள்ளதா என்பதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் -ஷெஹான் செமசின்ஹ

317 0

பாதுகாப்பு படைகளின் சுற்றிவளைப்பில் பள்ளிவாசல்களில் இருந்து எடுக்கப்படும் வாள்கள் அனைத்துமே ஒரே வர்க்கமானதாக இருப்பது எவ்வாறு? அப்படியென்றால் இந்த வாள்களின் பின்னணியில் பாரிய திட்டமொன்று இருந்துள்ளதா என்பதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் செமசின்ஹ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட வியாபாரப் பண்ட அறவீடுகள் கடட்டளைசட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்படும் ஆயுதங்கள் தொடர்பான காட்சிகளை வெளியிடாத வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கைப்பற்றப்படும் ஆயுதங்களை காண்பிப்பதனை தடை செய்து மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

பாடசாலைகளுக்கு மாணவர்களை வரவழைப்பதற்காகவே இவ்வாறாக ஊடக தடைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறாக பிள்ளைகளின் உயிருடன் விளையாட வேண்டாம். பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பக் கூடிய வகையில் பெற்றோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை தவிர்த்து ஆயுதங்களை ஊடகங்களில் காட்சிப் படுத்துவதனை தடை செய்து அந்த நம்பிக்கையை ஏற்படுத்த முடியாது.

இதனால் கல்வி அமைச்சர் பாடசாலைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு அடிக்கடி கூறுகின்றார். எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உறுதி மொழியை ஏற்றுக்கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை. நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்த முடியாது போயுள்ளது.