79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை!

313 0

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் வருவது போல், மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி, பறவைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

நவீன காலமாக மாறி போயிருக்கும் இந்த கால கட்டத்தில், சில மணி நேரங்கள் ஃபேன் இல்லாமல் வீட்டில் சிறிது நேரம் இருக்க முடியுமா என்பது கேள்விகுறி தான்.

இன்றைய தலைமுறையினருக்கு, செல்போனுக்கு சார்ஜ் இல்லாமல் போனால், ஒரு வேலையும் ஓடாது. என்ன செய்வார்கள் என்றே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தொழில்நுட்பத்துடன் ஒன்றிபோய் உள்ளனர். ஆனால், டாக்டர் பட்டம் பெற்ற ஒருவர், மின்சாரம் இன்றி, இயற்கையுடன் வாழ்ந்து வருகிறார். அவர் குறித்த சுவாரஸ்ய தகவலை தற்போது பார்க்கலாம்.

டாக்டர் பட்டம் பெற்றவர்

புனேவின் புத்வர் பெத் பகுதியில் சிறு வீட்டில் வசித்து வருபவர் 79 வயதாகும் ஹேமா ஷனே. இவர் சாவித்ரிபாய் முலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் புனேவில் உள்ள கர்பானே கல்லூரியில் பேராசிரியராக பணிப்புரிந்து ஓய்வுப்பெற்றவர் ஆவார்.

விருப்பம் இல்லை

விருப்பம் இல்லை

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயது முதலே மின்சார இணைப்பு இன்றி வளர்ந்துள்ளார். அதன் பின்னரே அப்பகுதிக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மின்சார பயன்பாட்டை விரும்பியதும் இல்லை. இதுவரை தனது வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தியதும் இல்லை.

வாழ முடியும்

வாழ முடியும்

இதுகுறித்து அவர் பேசும் போது, உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே அத்தியாவசிய தேவை என்றும் தன்னால் மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ முடியும் என்றும் கூறினார். இயற்கை சூழலான வாழ்வே போதும் என்கிறார்.

கவலைப்படவில்லை

கவலைப்படவில்லை

இயற்கையின் மீது பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ள ஹேமா, தான் வசித்து வரும் வீடு தனது செல்லப்பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் தான் சொந்தம் என்று தெரிவித்துள்ளார். இவரை பலர் வித்தியாசமாக பார்ப்பதாகவும், அதை பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் ஓய்வுப்பெற்ற பேராசிரியை ஹேமா கூறி உள்ளார்.