வெலிகந்த பகுதியில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு!

384 0

தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த பயிற்சி முகாம் ஒன்று பொலன்னறுவை – வெலிகந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாக வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

 

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த பயிற்சி முகாம் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா அலகல்ல அளுத்கம பகுதியிலிருந்து சொப்பர் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் 80 க்கும் மேற்பட்ட குண்டுகளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அவை சுமார் 50 வருட பழமையானவை எனவும், அவற்றை விஷேட அதிரடிப்படையினர் இன்று அப்புறப்படுத்தியுள்ளதாகவும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் அநுராதபுரம் சேனபுர பகுதியில் பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் மற்றும் இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் பலவும் கைப்பற்றப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.