மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியர் மீண்டும் இன்று (26) நண்பகல் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குறித்த ஆசிரியரை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவர் தொடர்பான சகல சட்ட ரீதியான ஆவணங்களையும் சமர்ப்பித்ததன் பின்னர், நீதிமன்றம் இவரை விடுதலை செய்ததாக அக்கல்லூரியின் நிருவாகி அஸ்செய்க் நௌஸர் எமது டெய்லி சிலோனிடம் தெரிவித்தார்.
வீசா நிறைவடைந்த பின்னர் நாட்டில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறித்த எகிப்து நாட்டு ஆசிரியர் மாதம்பை பொலிஸாரினால் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரபுக் கல்லூரி வளாகத்திலிருந்து பொலிஸாரினால் நேற்று முன்தினம் (24) எடுத்துச் செல்லப்பட்ட வாகனம் அத்தாட்சிகளை உறுதிப்படுத்தியதன் பின்னர், பொலிஸாரினால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


