மன்னாரில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு தென் பகுதி இளைஞர்கள் கைது

418 0

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இரு  இளைஞர்களை தாழ்வுபாட்டு கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை காலை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்களும் முச்சக்கர வண்டியில் தாழ்வுபாட்டு கிராமத்திற்குள் பயணித்துள்ளதோடு, தாழ்வுபாட்டு தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளனர்.

இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்தீர்கள் என கேட்டதிற்கு முறண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் கதைத்துள்ளனர்.

உடனடியாக அவர்களுடைய அடையாள அட்டையினை பரிசோதித்த போது அவர்கள் 25 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க கொழும்பு மற்றும் நிட்டம்புவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
கி ராம மக்கள் ஒன்று கூடியதை அவதானித்த அப்பகுதி பொலிஸார் விரைந்து செயட்பட்டு குறித்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதோடு, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் இடம் பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் அச்சத்துடனும் விழிர்ப்புணர்வுடனும் காணப்பட்ட நிலையிலே குறித்த சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களும் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.