எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது?- ப.சிதம்பரம்

472 0

எதிர்க்கட்சி தலைவர்களை பற்றி மட்டுமே வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எப்படி துப்பு கிடைக்கிறது? என ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி மட்டுமே ‘துப்பு’ கிடைக்கிறது?

2019 தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலின் அடையாளமே வருமான வரித்துறையின் ஏதேச்சதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே.

வருமானவரித் துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்து இருக்கிறது. அவ்வளவு தான்.

இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.