மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி மையம் ஒன்று நேற்று அதிகாலை அப்பிரதேச இளைஞர்களால் முற்றுகையிடப்ட்டுள்ளது.
ஜனாதிபதியின் போதைதடுப்பு வேலைத் திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேச செயலகத்தின் விழிப்பூட்டல் செயற்திட்டத்திற்கமைய பன்சேனை இளைஞர்கள் மூலம் இந் நடவடிக்கை இடம்பெற்றது
இதன்போது கசிப்பு (வடிசாராயம்) உற்பத்தி 19 பெரல்களுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களும் கைப்பற்றப் uட்டதுடன், சில பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.
இப் பொருட்களை பொலிஸார் வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிய போதும் அதனை நேரடியாக ஒப்படைக்காமல் வவுணதீவு பிரதேச செயலாளர் ஊடக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதன் போது பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், உதவிபிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பன்சேனை கிராம இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொலிஸாரும் வவுணதீவு பிரதேச செயலகமும் கிராம மக்களுடன் இணைந்து இவ்வாறான விசேட போதைப் பொருட் தடுப்பு நடவடிக்கைகளை அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


