உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு!

14 0

முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் சந்திப்பகுதியில் நேற்று காலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் ஒருபிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், நான்குபேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு பழைய முறிகண்டிப்பகுதியிலிருந்து மன்னார் இலுப்பைக்கடவைக்கு நேற்று காலை சென்ற உழவுஇயந்திரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.

துணுக்காய் சந்தியிலிருந்து கல்விளான் சந்தியூடாக இலுப்பைக்கடவை நோக்கிப்பயணித்த மேற்படி உழவுஇயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து கல்கவிளான் சந்திப்பகுதியில் உழவுஇயந்திரப்பெட்டி தடம் புரண்டுள்ளது.

இதில் பெட்டியில் இருந்த பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இதில் படுகாயமடைந்த நால்வர் உடனடியாக மல்லாவி வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இரண்டுபேர் மல்லாவி வைததியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தின் போது பழைய முறிகண்டியைச்சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் த்ந்தையே உயிரிழந்துள்ளார்.

ஊயிரிழந்தவரின் சடலம் மல்லாவி வைத்தியசாலையிலிருந்து மரண விசாரணைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுள்ளதுடன். இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை மல்லாவிப்பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Post

எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள்- டெனிஸ்வரன்

Posted by - August 19, 2018 0
தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்த வேண்டுமென்று நினைத்துக்கொண்டு எம்மினத்தின் எதிர் கால இலக்கினை சிதைத்து விடாதீர்கள். பலர் இதனைச் செய்வதற்கு முனைப்பாக உள்ளனர். நீங்கள் ஒரு பெரிய…

ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவர் கைது

Posted by - January 21, 2017 0
  வவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை வனவளபாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பெரியமடு பகுதியில் பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிய…

குப்பை கொட்டுவதற்கு தடை

Posted by - July 20, 2017 0
கொழும்பின் குப்பைகளை முத்துராஜவெலயில் கொட்டுவதற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் விடுத்திருந்த இடைக்காலத் தடை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பான வழக்கு பிரதம…

யாழ் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயம்

Posted by - April 24, 2017 0
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் குழந்தையும், தாயும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்  போதனா  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில்…

ஆவா கும்பலின் முக்கிய நபர் கைது

Posted by - September 5, 2018 0
யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆவா கும்பலின் முக்கிய நபரான லங்க்டா எனப்படும் நபர் இணுவில் பகுதியில் வைத்து…