வவுனியாவில் யானைத் தந்தங்களை வைத்திருந்தவர் கைது

284 0

வவுனியா, ஓமந்தை பகுதியில் இரண்டு யானைத் தந்தங்களை வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் யானைத் தந்தங்களை ஒருவர் கைவசம் வைத்திருப்பதாக மாங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பகுதியிலுள்ள காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இரண்டு தந்தங்களை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தந்தங்கள் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதனை மறைத்து வைத்திருந்த குற்றசாட்டில் நெல்வேலிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டிருந்தார். அத்தோடு நேற்றையதினம்  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.