பரிசு பெட்டகம் சின்னத்தை வாக்காளர்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவோம்- தங்க தமிழ்ச்செல்வன்

463 0

அனைத்து வாக்காளர்களிடமும் பரிசு பெட்டகம் சின்னத்தை கொண்டு சென்று வெற்றி பெறுவோம் என்று தேனி பாராளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதற்கு பின்னர் பொதுவான சின்னம் தேர்வு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி டி.டி.வி. தினகரன் அணிக்கு பரிசு பெட்டகம் சின்னம் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை அனைத்து வாக்காளர்களிடமும் கொண்டு சென்று வெற்றி பெறுவோம். எங்களுக்குதான் மக்கள் செல்வாக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.