வாக்காளர்களின் விரல்களில் வைக்க 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயார்!

11 0

பாராளுமன்ற தேர்தலில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. கட்சிகள் கூட்டணி, தொண்டர்கள் ஆரவாரம், தலைவர்கள் பிரசாரம், ஆட்டோக்களில் பிரசாரம், கட்சிகளின் பொதுக்கூட்டம் என நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தேர்தலின்போது ஓட்டுப்பதிவு அன்று வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை வைக்கப்படுவது வழக்கம். இது காலம்காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த அழியாத மை தயாரிக்கும் அரசு தொழிற்சாலை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ளது. நாடு முழுவதும் 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுதேர்தலுக்காக 10 மில்லி லிட்டர் அளவில் 26 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்க இந்த நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் தேர்தல் கமிஷனிடம் இருந்து உத்தரவு வந்தது. உடனடியாக அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கின.

இதற்காக இதுவரை ரூ.66 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட தேர்தலுக்கு தேவையான 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தொகுதி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

Related Post

மதுரையிலும் நினைவேந்தலுக்கு தடை. பாஜக பினாமி தமிழக அரசின் தொடரும் துரோகம்.

Posted by - June 28, 2017 0
சர்வதேச சித்ரவதைகளுக்கு எதிரான தினமான ஜூன் 26 அன்று ஒவ்வொரு ஆண்டும் மே பதினேழு இயக்கம் சார்பில் மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் வகையில் ஒன்று…

ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு பிறகும் பழைய விலைக்கு பொருட்களை விற்றால் நடவடிக்கை

Posted by - July 5, 2017 0
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏற்பட்ட விலை மாற்றம் பற்றி பொருட்களில் தனி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும், பழைய விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்ததாக வழக்கு – இலங்கையில் கைதான தமிழ் இளைஞர் விடுதலை

Posted by - July 9, 2016 0
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி செய்ததாக கூறி இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழ் வம்சாவளி இங்கிலாந்து பிரஜை வேலத்தாபிள்ளை ரேணுகருப்பன் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்…

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அல்ல சமஷ்டியையே கோருகிறோம்!

Posted by - December 27, 2016 0
வட கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம் மக்கள் உணர்வோடும் இணக்கத்தோடும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என தமிழரசுக் கட்சியின் தலைவரும்…

திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்: ராமதாஸ்

Posted by - April 1, 2017 0
“அன்புமணியின் சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்” என்றும், “திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்”, என்று பா.ம.க. பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசினார்.