எல்லையில் பதற்றம் நிலவினாலும் இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்!

316 0

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார்.

அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தை சேர்ந்தவர் பர்வீந்தர் சிங் (வயது 33). இவரது உறவுப்பெண் கிரண் சர்ஜீத் கவுர் (27), பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் பகுதியை சேர்ந்தவர். 2016-ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் செய்ய இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். திருமணத்துக்காக பிப்ரவரி 23-ந் தேதியே கிரண், பாட்டியாலா வருவதாக இருந்தது. ஆனால் பயங்கரவாத தாக்குதலால் தாமதம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை 45 நாள் விசாவில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் மூலம் பாட்டியாலா வந்தார்.

அவர்களது திருமணம் அங்குள்ள குருத்வாராவில் சீக்கிய முறைப்படி நேற்று நடைபெற்றது. பர்வீந்தர் சிங் கூறும்போது, “கடந்த ஆண்டு நான் பாகிஸ்தான் செல்ல விசா கேட்டபோது மறுக்கப்பட்டது. அதனால் தான் பெண் வீட்டார் இங்கு வந்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனது மனைவிக்கு இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பேன்” என்றார்.