பத்மலட்சுமி ஐநாவில் நல்லெண்ண தூதராக நியமனம்!

288 0

அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையல் கலை வல்லுனர், டி.வி. நட்சத்திரம், எழுத்தாளர் என பல முகங்களை கொண்ட பத்மலட்சுமி ஐ.நா. வளர்ச்சித்திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். #

அமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையல் கலை வல்லுனர், டி.வி. நட்சத்திரம், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் பத்மலட்சுமி (வயது 48).

இவர் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ரு‌ஷ்டியின் முன்னாள் மனைவியும் ஆவார்.

கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்த இவரை அமெரிக்கா ஈர்த்துக்கொண்டது. இவர் இப்போது ஐ.நா. வளர்ச்சித்திட்டத்தின் (யு.என்.டி.பி.) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இதற்கான அறிவிப்பு, ஐ.நா. சபையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதுபற்றிய தகவலை யு.என்.டி.பி. தலைமையகத்தில் நிருபர்கள் மத்தியில் பத்மலட்சுமி நேற்று முன்தினம் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ பல நாடுகளில் வறுமை பெருமளவு ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமத்துவமின்மையை ஒழிக்க முடியவில்லை. சமத்துவமின்மை விடாப்பிடியுடன் சமூகத்தில் இருக்கிறது. ஐ.நா. வளர்ச்சி திட்டத்தின் நல்லெண்ண தூதர் என்ற வகையில், எனது முக்கிய கவனம், சமத்துவம் இல்லாத நிலை, பணக்கார நாடுகளில் மட்டுமல்ல ஏழை நாடுகளிலும் உள்ளது, இது மக்களை பாதிக்கக்கூடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுவேன்’’ என குறிப்பிட்டார்.