வடக்கு ஆளுநா் கால அவகாசம் கோர ஜெனீவா செல்வது மன வேதனையளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள்

281 0

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் ஆளுநா் ஜெனீவா செல்வதற்கு முன்னா் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து, அவா்களது உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு அப்பால் அவா் ஜெனீவா சென்று நியாயத்தை பேசவேண்டும். நீதியை பேசவேண்டும். எனவும் கேட்டுள்ளனா். 

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்கத்தின் தலைவி யோகராசா கலாரஞ்சினி தலமையில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனா். 

இதன்போது வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் செல்லும் குழுவில் இடம்பெற்றிருப்பது குறித்து ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

 இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

ஆளுநா் ஜெனீவா செல்வதாக அறிந்திருக்கிறோம். அவரை சந்திக்க முயற்சித்தோம். ஆனால் அவா் கொ ழும்பில் இருப்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆளுநா் போரின் வலியை சுமக்காத போதும் ஒரு தமிழராக அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா செல்வது எமக்கு வருத்தமளிக்கிறது, அதிர்ச்சியளிக்கிறது. 

இன அழிப்பிலிருந்து எஞ்சியவா்களை நாங்கள் கொண்டு சென்று ஒப்படைத்தோம். அவா்களையே நாங்கள் இன்றளவும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் ஆளுநா் எமக்காக பேசவேண்டியவா். அந்தவகையில் ஆளுநருடைய ஜெனீவா விஜயம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. 

ஆனாலும் ஜெனீவா செல்வதற்கு முன்னா் ஆளுநா் எங்களை சந்திப்பதற்கு சந்தா்ப்பம் வழங்கவேண்டும். அதன் ஊடாக எங்களுடைய உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கமைய ஜெனீவாவில் அவா் நீதியை பேசவேண்டும் நியாயத்தை பேசவேண்டும். என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு என்றார்,