மோடி மார்ச் 6ந்தேதி சென்னை வருகை; தமிழிசை சவுந்தரராஜன்

309 0

பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 6ந்தேதி சென்னைக்கு வருகிறார் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 6ந்தேதி சென்னைக்கு வருகை தருகிறார்.

பிரதமர் மோடி மார்ச் 1ந்தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார்.  அதன்பின் சென்னைக்கு மார்ச் 6ந்தேதி அவர் வருகிறார்.  சென்னையில் நடைபெறும் பிரமாண்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசுகிறார் என கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடம் பெற்றுள்ளது.  இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதற்கான முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டது.  எனினும் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
இதுபற்றி கூறிய தமிழிசை, தே.மு.தி.க.விற்கு உரிய மரியாதை தரப்பட்டது.  எண்ணிக்கை முக்கியமில்லை.  எண்ணமே முக்கியம் என கூறினார்.
விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு பலன் தரும்.  தேவையான வேளாண் பொருட்களை அவர்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் ஊக்க தொகையாக அமையும் என அவர் கூறினார்.