வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகர்கள் கட்டாயம் கடமைபுரிய வேண்டும் என வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
அதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ்ப்பாண நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு நேற்று (25) இரவு சென்றிருந்தார்.
இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர், கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை நிறைவு செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார்.
அத்தோடு வடமாகாணத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் மருந்தகங்களின் உரிமம் கட்டாயம் காட்சிப்படுத்தப்பட வேண்டியதுடன் மருந்தாளர்கள் (Pharmacist) கட்டாயம் கடமையில் இருக்கவேண்டும் என்றும் ஆளுநர் பணித்தார்.


