வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை (16) பிற்பகல் 3.00 மணியளவில் வடமராட்சி மந்திகை சிலையடி சந்திக்கு அருகாமையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருத்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான தொலைபேசி இருந்த சிறிய பையை பறித்துக் கொண்டு யாழ்ப்பாணப் பக்கமாக தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.


