வெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.

30802 3,554

ஈழத்தீவில் உள்ள அனைவருக்கும் “ வெள்ளளை வான்” என்ற ஒற்றை சொல்லின் அர்த்ததை உடனே உள்வாங்கிக் கொள்வார்கள். குறிப்பாக தமிழ் மக்கள் ”வெள்ளை வான்” என்றதும் இன்று வரை எச்சிலை விழுங்கிய படியே, அல்லது பெருமூச்சு விட்டவாறே உச்சரிக்கும் சொல்லாக மாறிவிட்டது.
2005 ஆம்  ஆண்டில் “வெள்ளை வான்” கடத்தல்கள்  ஆரம்பமாகின. இவ் வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதா மகனாக சிறிலங்காவின் அப்போதை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச திகழ்ந்தார்.


தமிழீழ விடுதலை போருக்கு உதவியவர்கள், ஊடகவியலாளர்கள், விடுதலையை நேசித்தவர்கள்,சாதாரண பொதுமக்கள்,….என வகை தொகையின்றி வெள்ளைவானின் கடத்தப்பட்டார்கள். அவர்கள் காணமல் போனோர்களாகவே இன்று வரை உள்ளனர்.
இந்த வெள்ளைவான் கடத்தலின் பிதாமகன் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் சிறிலங்காவில் வெள்ளை வான் கடத்தல்களை தான் அறிமுகப்படுத்தவில்லை என்றும், அமெரிக்காவே அதனை சிறிலங்காவில் அறிமுகப்படுத்தியது என்றார்.


செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், உலகெங்கும் உள்ள தீவிரவாதிகளை அமெரிக்கா தேடிப்பிடித்து, குவான்டனாமோ தளத்துக்கு கொண்டு சென்றது. அப்போது மலேசியர் ஒருவர் சிறிலங்காவில் இருந்தார். அமெரிக்காவின் எவ்பிஐ (FBI) அவரை தேடிப்பிடித்தது. அவரை இங்கிருந்து கொண்டு செல்வதற்கு, அவர்கள் நிறைய விடயங்களைச் செய்தார்கள்.


அவரிடம் ஒரு கடவுச்சீட்டைக் கொடுத்து இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை அவர்கள் அனுமதிக்கச் செய்தனர். பின்னர் அவரை சிறிலங்காவில் இருந்து வெளியேற்றினர்.அதற்கு அவர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றவில்லை. என ஒரு குட்டிக்கதையை கூறி வெள்ளைவைானின் தந்தை  நான் அல்ல என்றார்.


அதுமட்டுமல்ல ஜேவிபி கிளர்ச்சியின் போது கூட கடத்தல்கள் இடம்பெற்றது. இது என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. இந்த வழிமுறை உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று எனவும் கூறினார். அதுமட்டுமல்ல “எமது புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்திய ஹைஸ் வான்கள், வெள்ளை நிறைமுடையவை என்பதால், வெள்ளை வான் என அழைக்கப்பட்டிருக்கலாம்” எனவும் விளக்கமளித்தார்.


கோத்தாபய ராஜபக்சவின் விளக்கங்கள் புலனாய்வாளர்களுக்கு  ஒரு சாதாரண செய்தியாக இருக்கலாம். ஆனால் தமது பிள்ளைகளை, வாழ்கை துணைவர்களை , தந்தையர்களை, சகோதரர்களை, நண்பர்களை காணமல் அவர்களுக்கு என்ன நடத்தோ? உயிருடன் உள்ளனரா? இறுதி சமயக்கிரிகை செய்யலாமா கூடாதா? என தவிக்கும்  உள்ளங்களின் வலி புரியாமா கோத்தாபய ராஜபக்சவிற்கு.


ஐ.நா வரை சென்று வருடக்கணக்காக கவனயீர்பு போராட்ங்களை நடாத்திக்கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வேதனையை யார்தான் புரிந்து கொள்வார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பலர் கால ஒட்டத்தில் மரணித்திக் கொண்டிருக்கிறார்கள். காலப்போக்கில் இப் போராட்டத்தை நலிவடையச்செய்வதே பேரிணவாதத்தின் திட்டம்.
வெள்ளைவான் எம்மவரின் வேதனையின் விம்பம்.

There are 3,554 comments