கடந்த வருடம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிப்பு

15086 0

இலங்கையில் அதிகளவான பெண்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக பெண்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு கர்ப்பப்பை புற்றுநோய் எனவும் சுகாதார மேம்பாட்டுச் சபையின் பணிப்பாளர் வைத்தியர் பபா பலிஹவடன  தெரிவித்துள்ளார்.இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பபில்லோமா (எச்.பி.வி.) எனும் தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கையானது 11 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு அரச பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.ஆபத்தான சூழ்நிலையிலிருந்து பெண் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு பெற்றோர் முன்வர வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும்  நோக்கில், எச்.பி.வி. எனும் தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த 2018ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கையில் புற்றுநோயினால் 29 ஆயிரத்து 843 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் மேலும்  குறிப்பிட்டார்.  

Leave a comment