நிலாமுற்ற குழுமத்தின் முதலாவது ஐரோப்பிய நிகழ்வு!

360 0

டென்மார்க்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 27-01-2019 ) அன்று 
பரடெசியா நகரில் சிறப்பாக இடம்பெற்றது.

பைந்தமிழ் செம்மல் வ.க.பரமநாதன். அவர்கள் கவியரங்கத்திற்கு தலைமை தாங்க சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கவிஞர் இணுவையூர் சக்திதாசனில் இருந்து கோவைக்கவி வேதா இலங்காதிலகம், கவிஞர் சுவிற்சலாந்து கங்கைமகன், நக்கீரன்மகள், நிலா முற்ற ஒருங்கிணைப்பாளர் சோதி செல்லத்துரை, ரதிமோகன், சுபாஷினி, கலாநிதி ஆகியோர்

“வழி மாறிய பயணங்கள் ” என்னும் தலைப்பில் 8 கவிஞர்கள் பங்கேற்றார்கள்.

நாடவியலாளர் திரு. அரியநாயகம். பிரான்ஸ், இயக்குனர் திரு .கீ.சே துரை, நிலாமுற்ற டென்மார்க் ஒருங்கிணைப்பாளர் திரு. சோதி செல்லத்துரை ஆகியோரது மங்கல விழக்கேற்றலுடன் ஆரம்பமாகியது விழா

தேவாரம் இடம்பெற்று, போரினால் உயிர் நீத்த தமிழ் மக்களுக்கான நினைவு வணக்கத்தை தொடர்ந்து,

டென்மார்க்கில் எம்மோடு வாழ்ந்து கடந்த வருடம் மறைந்து போன கவிஞர் அமரர். வேலணையூர் பொன்னண்ணா அவர்களுக்கும் பிரத்தியேகமாக நினைவு வணக்கமும் இடம்பெற்று
திரு .சோதி செல்லத்துரை அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து

நிலாமுற்றத் தலைவர் முத்துப்பேட்டை மாறன் அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்ற தொடர்ந்து நிலாமுற்ற பொறுப்பாளர்களும் பல்வேறு நாடுகளில் இருந்து உரையாற்றினார்கள்.

தொடர்ந்து இரண்டு நூல்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஒன்று பிரான்சிலிருந்து வெளிவரும் “உடல்” எனும் சஞ்சிகை
இன்னொன்று இங்கிலாந்து எழுத்தாளர் தீபதிலக் அவர்களின் ” மகிழம்பூவும் அறுகம்புல் லும்” எனும் சரித்திர நாவல்

அந்த நூல்களின் விமர்சன உரைகளை ஆசிரியர். கீ.சே துரை, எழுத்தாளர் ஜீவகுமாரன், கவிஞர். கங்கை மகன் சுவிஸ்.
கவிதாஜினி நக்கீரன் மகள் ஆகியோர் நிகழ்த்தினர். இறுதியாக நூலாசிரியர் தீபதிலக் அவர்களுடைய ஏற்புரையுடன் விழா நிறைவுற்றது.

மண்டபம் நிறைந்த இலக்கிய உணர்வாளர்கள் கூடி சிறப்பாக இடம்பெற்றது விழாவில்

இடையில் சூடான குளிரான பானங்களும் சிற்றுண்டி வகைகளும் விழாவை தொய்வின்றி நகர்த்திச் செல்ல .. இரவு விருந்தோடு விழா நிறைவு பெற்றது.

நிகழ்வில் பங்குபற்றிய கவிஞர்கள் , எழுத்தாளர்களுக்கு “நிலா முற்றம்” பதித்த கேடயங்களும் கொடுத்து மதிப்பளிக்கப்பட்ட னர்.

Leave a comment