வவுனியாவில் நேற்றையதினம் இரவு பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று பேர் கைதுசெய்யபட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் வெளிநாட்டு சிகரெட்களை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் ஒருவரும், குடு, கஞ்சா போதைப் பொருட்களை மில்லிகிராம் அளவில் வைத்திருந்தனர். என்ற குற்றசாட்டில் இருவருமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யபட்டவர்கள் இன்று நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


