ஈரான் சிறையில் இருந்து 4 மீனவர்கள் விடுதலை

512 0

fishஈரான் நாட்டு கடற்படையால் பிடித்து செல்லப்பட்டு நாடு திரும்பிய 4 குமரி மாவட்ட மீனவர்களுக்கும் தலா 2 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு செய்திக்குறிப்பொன்றை  வெளியிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டினம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 4 தமிழக மீனவர்கள், டுபாயைச் சேர்ந்த தனியார் மீன்பிடி படகில் ஒப்பந்தத் தொழிலா ளர்களாக, அஜ்மான் கடல் பகுதியில் பணியாற்றி வந்தனர்.
கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது ஈரான் நாட்டு கடல் பகுதிக்குள் வழிதவறி சென்றுவிட்டனர்.
அந்நாட்டு கடற்படையினரால் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், மீனவர் ஒருவர் காயமடைந்து, ஈரான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, 4 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்தார்.
தமிழக அரசு அதிகாரிகள், ஈரான் நாட்டு இந்திய தூதரக அதிகாரிகள், மத்திய அரசு வெளிவிவகாரத் துறையினரையும் தொடர்பு கொண்டனர்.
4 மீனவர்களின் விடுதலைக்கான சட்ட உதவிகளை அளித்ததுடன், உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தமிழக அரசின் தொடர் முயற்சிகள் காரணமாக, 4 தமிழக மீனவர்களும் ஈரான் அரசால் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டு மே 1ஆம் திகதி சென்னை வந்தடைந்தனர்.
அவர்களின் குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment