பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து

487 0

download-4முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஷவின் சார்பில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ, இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் உள்நாட்டு விமான பயணங்கள் உட்பட செலவிடப்பட்டுள்ள அரசாங்க பணம் 163 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பயணத்திற்கு முன்னாள் திறைசேரி செயலாளர் பீ.பீ ஜயசுந்தர உட்பட தலைமை கணக்காளர்களே நேரடியாக பொறுப்பு கூற வேண்டும் என சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பணத்தை செலவிடுதற்காக பசில் ராஜபக்சவின் நேரடி தலையீடு மேற்கொள்ளப்படவில்லை. அதிகாரிகள் பயணத்தை அனுமதித்ததற்கமைய மேற்கொள்ளப்பட்ட செலவுகளுக்கு பசில் பொறுப்பு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளின் அனுமதிக்கமைய அமைச்சர் என்ற ரீதியில் பசில் ராஜபக்சவினால் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கமநெகும பிரதான திட்டத்தில் 1554 இலட்சம் ரூபா செலவிடப்பட்டமை, விமான படையின் விமானங்களில் உள்நாட்டு விமான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டமை, 3744 மில்லியன் ரூபா பெறுமதியான 14 வாகனங்கள் பயன்படுத்தியமை, பல கோடி அரசாங்க பணத்தை எரிபொருளுக்காக செலவிடப்பட்டமை மற்றும் 151 இராணுவத்தினர் மற்றும் கடற்படை அதிகாரிகளை, ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாப்புக்க பயன்படுத்தியமை ஆகிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.