பஸ்ஸில் பயணிக்கும் பெண்களை சூட்சுமமாக வீடியோ எடுத்தவர் சிக்கினார்

10021 49

காலி – மாத்தறை பிரதான வீதியில் கடமையில் ஈடுபடுத்தப்படும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனராக கடமையாற்றி வந்த சந்தேகநபரொருவர் பஸ்ஸில் பயணிக்கும் பாடசாலை சிறுமிகள் மற்றும் பெண்களை மிக சூட்சுமமான முறையில் வீடியோ எடுத்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகநபரை இன்றைய தினம் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

மீட்டியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் எச்.டி.எம். துஷாரவின் தலைமையிலான குழுவொன்றால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு நேற்றைய தினம் வீடியோ பதிவுகளை மேற்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரால் கைதுசெய்துசெய்யப்பட்டார். 

சந்தேகநபர் மிக சூட்சுமமான முறையில் பதிவுகளை மேற்கொண்டிருந்த பெருந்தொகையான வீடியோ காட்சிகளை கொண்ட மூன்று கையடக்க தொலைப்பேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தங்காலையைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை கைதுசெய்து அவரிடம் மேற்கொண்டிருந்த விசாரணைகளில் குறித்த நபர் இவ்வாறு பஸ்ஸில் பயணிக்கும் பெண்களை புகைப்படம் எடுத்தும், அவர்கள் பேரூந்தில் ஏறும் இறங்கும் வேளையில் மிக சூட்சுமமான முறையில் அந்தரங்க பகுதிகளை வீடியோ எடுத்தும் அதனை ஹிக்கடுவை கடற்கரைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a comment