ரணிலின் அரசியல் இராஜதந்திரங்களை ஜனாதிபதி கற்றுக் கொள்ள வேண்டும்!

317 0

ஜனாதிபதி   மைத்திரிபால சிறிசேன மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியினை அமைதியாக  சட்டத்தின் ஊடாக தோற்கடித்தமையின் காரணமாகவே மீண்டும் ஜனாதிபதியாலே பிரதமராக  ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் இராஜதந்திரங்களை ஜனாதிபதி  கற்றுக்  கொள்ள வேண்டும் என   முன்னாள்   பாராளுமன்ற உறுப்பினர்  மேர்வின்  சில்வா  தெரிவித்தார்.

விஞ்ஞான ,தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று   அமைச்சின்   கடமைகளை  பொறுப்பேற்றுக்  கொண்ட  நிகழ்வில்   கலந்துக்  கொண்டு   கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து  ஜனாதிபதி மீண்டும்  ஐக்கிய தேசிய கட்சியினரிடம் ஆட்சியை கௌரவமாக ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட  பின்னர்  ஐக்கிய தேசிய  கட்சியின் உறுப்பினர்களின் மத்தியில் ஜனாதிபதி பல விமர்சனங்களை தொடுத்தார்.  இது ஒரு  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அழகல்ல,  இன்றும் இவர் தனது தனிப்பட்ட வெறுப்புக்களை அரசியலில் முன்னிலைப்படுத்துகின்றார். என  கடுமையாக  விமர்சித்தார்.

Leave a comment