கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூடு , புளுமெண்டல் சங்கவின் மனைவி கைது

354 0

கிராண்ட்பாஸ் – ஹேனமுள்ள பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் பாதாள உலக குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிசூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுவின் தலைவரான புளுமெண்டல் சங்க துப்பாக்கி சூடு மேற்கொண்ட போது அணிந்திருந்த உடை மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்கு புளுமெண்டல் சங்கவின் மனைவி தீ வைத்துக் கொண்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபரான புளுமெண்டல் சங்கவை கைது செய்ய விஷேட விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment