சுனாமிப் பேரலையில் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்(காணொளி)

343 0

சுனாமிப் பேரலையின் தாக்கத்தால் உயிரிழந்த மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்> வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று நினைவுகூரப்படுகின்றன.

நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டுக்கான வேலைகளை அப்பகுதி மக்களும், பொது அமைப்புக்களும் இணைந்து நேற்றையதினம் மேற்கொண்டிருந்த நிலையில்> இன்று அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2004 ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரலையினால் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்திருந்தனர்.

இதில் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்குப் பகுதியிலேயே அதிகளவிலான மக்கள் உயிரிழந்திருந்தனர்.

இவ்வாறு உயிரிழந்திருந்த மக்களின் நினைவாக> வடமராட்சி கிழக்கில் சுனாமி நினைவாலயமொன்று அமைக்கப்பட்டு சுனாமி நாள் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதற்கமைய இம் முறையும் சுனாமி நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இன்று இடம்பெறுகின்றன.

Leave a comment