சீரற்ற காலநிலையினால் இளைஞன் பலி

308 0

தொடர்ந்து பெய்து வரும் மழையுடனான காலநிலையினால் ராஜாங்கனை நீர்தேக்கத்தின் 8 வான் கதவுகள் நேற்று (23) திறக்கப்பட்டுள்ளன. 

இதன்போது ராஜாங்கனை குளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். 

ராஜாங்கனை நீர்தேக்கத்தின் வான் கதவுகளை மூடி நேற்று காலை முதல் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு சடலத்தை மீட்டுள்ளனர். 

அனுராதபுரம், சாலியவெவ பகுதியை சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a comment