சீனா எமக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது – தூதுவர் தயான் ஜயதிலக

248 0

இலங்கைக்கு நேர்மையான, நெடுங்கால நட்புறவு நாடாக சீனா உள்ளதுடன் யுத்த காலங்களில் அதனை எதிர்கொள்வதற்கு சீனாவால் தொடர்ந்து வழங்கப்பட்ட ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாகும். 

அத்தோடு பலம்வாய்ந்த சர்வதேச நாடுகள், அமைப்புக்கள் இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு முற்படுகையில் இலங்கைக்கு சீனா ஆதரவை வழங்கி வந்துள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம் என ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக, ரஷ்யாவிற்கான சீன தூதுவர் லீ ஹயை வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள சீனத் தூதரகத்தில் சந்தித்த போதே தயான் ஜயதிலக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குறித்த சந்திப்பின் போது உலகின் நிலவும் பொருளாதார, பூகோள நிலை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், பொதுவாக முக்கியத்துவம் பெற்றுள்ள தற்போதைய அரசியல் நிலை மற்றும் குறிப்பாக தெற்காசிய பிராந்திய அரசியல் பற்றியும் கலந்துரையாடப்பட்டது

Leave a comment