வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது.

9395 76

மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக தேவைப்படுகிறது.
உதவ முன் வாருங்கள்….

வடக்கில் அவசர நிலைமை இரணைமடுவின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.

வடக்கில் பொழிந்துவரும் கனமழையால் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 38 அடி 6 அங்குலத்தை தாண்டியது. மேலதிக நீரை வெளியேற்றவென 11 வான்கதவுகளும் முழுதாக திறக்கப்பட்டது இதன் காரணமாக மேலும் வெள்ளத்தில் மூழ்கியது நீரோட்டப்பகுதிகளும் நீரேந்துப்பகுதிகளும்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். நிலைமை மேலும் மோசமாகுமென கருதப்படுகின்றமையால் மக்களை விழிப்போடும் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் இருக்க அறிவுறுதப்படுகின்றனர்.
இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டோர் குடும்பங்களின் விபரம்
1)இந்துபுரம்-17
2)பனிக்கங்குளம்-15
3)மாங்குளம்-55
4)பண்டாரவன்னி-40
5)பேராறு-90
இவை தற்காலிக தகவல்கள். மேலதிக தகவல்கள் விரைவில் அனுப்பப்படும். நன்றி

Leave a comment