தொண்டமனாறு – அக்கறை கடலேரி வான் கதவுகள் திறப்பு!

16622 0

வடமராட்சி நன்னீர் ஏரி பெருக்கெடுத்துள்ளதால், தொண்டமனாறு மற்றும் அக்கறை கடலேரி வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால், மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை அப்பகுதிக்குச் செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீரின் மட்டம் 3.8 அளவு உயர்வடைந்துள்ளது. வடமராட்சி நன்னீரேரி மற்றும் தொண்டமனாறு கடலேரி உட்பட அக்கறை பகுதி கடலேரிகளின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. 

எனவே, வழமையாக 4 அடி நீரின் மட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளமையினால், தொண்டமனாறு மற்றும் அக்கறை பகுதிகளில் குளிக்கச் செல்பவர்களை அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாமென்றும், பாதையில் பயணிப்பவர்கள் மிக அவதானமாக செல்லுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 


மருதங்கேணி பிரதேசத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a comment