நீதிமன்றை மதிக்கின்றோம்;தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை – கெஹலிய

80 0

நீதிமன்றத்தினை மதிக்கின்றோம் ஆனால்  கிடைக்கப்பெற்ற தீர்ப்பினை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய அரசியல்  நிலவரம் தொடர்பில்   நாங்கள் உறுதியான தீர்மானத்தையே மேற்கொண்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர்  கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்கட்சியாக  நாங்கள்  செயற்படவுள்ளோம். இம்முறை   54 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்கட்சி ஆசனத்தில் அமரவில்லை. 101 உறுப்பினர்களின் பலத்துடனே எதிர்கட்சியாக செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இன்று  திங்கட்கிழமை  இடம் பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில்  கலந்துக் கொள்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.