நிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் !

345 0

தனிநபர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை கடந்த ஐம்பது நாட்களில் தெரிந்துகொண்டோம்.

அதனால் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

பாராளுமன்றில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி கடந்த 51 நாட்களாக எவ்வாறு நடந்துகொண்டார் என்பதை முழு நாட்டு மக்களும் கண்டுகொண்டனர். அதனால் தொடர்ந்தும் நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு இருப்பதால் நாட்டுக்கே பாதிப்பு ஏற்படும். அது நாட்டுக்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment