இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவாரத்தை!

230 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இன்று முதலாளிமார் சம்மேளனத்தில் இடம்பெற்றது. 

 

இச் சந்திப்பில் கலந்துகொண்ட பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயளாலர் எஸ். இராமநாதன் இப் பேச்சுவார்த்தை தொடர்பில் கூறுகையில்,

இன்று முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவாரத்தை இடம்பெற்றது. இதில் முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை விடவும் முன்னேற்றம் காணப்பட்டது. அதாவது 600 ரூபாய் அடிப்படை சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அதிகரிப்பதற்கு சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற இணக்கப்பாடு எட்டபடவில்லை.

இந்த பேச்சுவார்த்தையில் கம்பனிகள் சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. எவ்வாறிருப்பினும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது அதிகரிக்கவுள்ள தொகை குறித்து தெரிவிக்கப்படும். அத்தோடு அந்த சந்தர்ப்பத்திலேயே ஒப்பந்த்தில் கைசாத்திட எதிர்பார்ப்பதாகவும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயளாலர் எஸ்.இராமநாதன் , இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததோடு, முதலாளிமார் சம்மேளனத்தின் சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க வீரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment